×

கடலூர் மாவட்டத்தில் காலை முதலே தொடரும் கனமழை: ஆட்சியர் அலுவலகம் எடுத்த அதிரடி நடவடிக்கை

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தொடரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இன்று கனமழை காரணமாக ஆரஞ் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் காலை 6 மணிக்கு பிறகு இந்த மழை என்பது மிக கனமழையாக தற்போது பெய்து வருகின்றது.

பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கும் அளவிற்கு இந்த மழை பெய்து வரும் நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஏரியாவிடப்படி ஊர்ந்து செல்லுகின்றன. கனமழை காரணமாக கடலூர் லவரன்ஸ் சாலை, புதுப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தொடர்ந்து இது போன்று மழை பெய்தால் பிற்பகலுக்கு பிறகு தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் போகும் நிலை எழுந்துள்ளது.

மேலும் கடலூர் மாவட்டத்தில் அதிகப்படியாக 12சி.மி. சிதம்பரத்தில் 10சி.மி. காட்டுமன்னார் கோயிலில் 9.8சி.மி. மழையும் பெய்துள்ளது. மழையை எதிர்க்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் கடலூர் மாநகராட்சி நிர்வாகமும், மாநகராட்சி பகுதிகளில் எந்தந்த இடத்திலும் தண்ணீர் தேங்காத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது மேற்கொண்டு வருகின்றனர். மழை தொடர்பான எந்த ஒரு புகாரையும் 1077 என்ற கட்டுப்பட்டு அறை எண்ணிற்கு தொடர்புகொண்டடு தெரிவிக்கலாம் என கடலூர் மாவட்ட நிருவாகம் தெரிவித்துள்ளது.

The post கடலூர் மாவட்டத்தில் காலை முதலே தொடரும் கனமழை: ஆட்சியர் அலுவலகம் எடுத்த அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Cuddalore district ,Collector ,Cuddalore ,Bay of Bengal ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில்...