×

ரசிகர் வெள்ளத்தில் திக்குமுக்காடிய விஜய்… பரிசு கொடுத்த மாற்றுத் திறனாளி மாணவரை கட்டியணைத்து பாராட்டினார்!!

சென்னை : 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ் மற்றும் கல்விக்கான ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்கவுள்ளார். இதற்கான விழா விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள ஒரு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. கல்வி விருது விழாவுக்கு சுமார் 4,500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவுக்கு வந்த விஜய், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெள்ளத்தில் நீந்திச் சென்றார். விழா மேடைக்கு வந்த விஜய்க்கு மாணவர்கள், பெற்றோர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பரித்தனர். தொடர்ந்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட விஜய், அரங்கில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் மத்தியில் அமர்ந்தார். மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர் தான் வரைந்த ஓவியத்தை நடிகர் விஜயிடம் வழங்கினார்.

இந்த ஓவியத்தை பார்த்து நெகிழ்ந்த விஜய் அவரை கட்டியணைத்து பாராட்டினார். இதனிடையே முதல் இடம் பிடித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் காசோலையாக வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

The post ரசிகர் வெள்ளத்தில் திக்குமுக்காடிய விஜய்… பரிசு கொடுத்த மாற்றுத் திறனாளி மாணவரை கட்டியணைத்து பாராட்டினார்!! appeared first on Dinakaran.

Tags : Tikkumukudya Vijay ,Chennai ,Tamil Nadu ,Tikkumukudi Vijay ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...