×

அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் மயங்கி விழுந்து சாவு

சேலம்: சேலம் கோட்டை வெங்கடசாமி தெருவை சேர்ந்தவர் முகதீர்முகமது (36). குகை ஆற்றோர வடக்கு தெருவில் ஜிம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர் நீராவி குளியல் போட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இரவு 10.30 மணியளவில் அவரது தாய் அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரது ஜிம்மிற்கு வந்து பார்த்தபோது நீராவி குளியல் அறையில் அவர் மயங்கி விழுந்து கிடப்பது தெரிந்தது.

அந்த அறையின் கண்ணாடியை உடைத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டது தெரிந்தது. இதுபற்றி செவ்வாய்பேட்டை போலீசார் கூறுகையில், முகதீர் முகமதுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. அவர் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது என்றனர்.

 

The post அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் மயங்கி விழுந்து சாவு appeared first on Dinakaran.

Tags : Salem ,Mukhadeer Muhammed ,Salem Fort Venkatasamy Street ,Cave ,North Street ,
× RELATED ஸ்கூலுக்கு போகக்கூடாதுங்கிறாரு...