×

வளைகுடா நாடுகளில் முதல் முறையாக ஓமனில் 5% வருமான வரி அறிமுகம்

துபாய்: கச்சா எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து வளைகுடா கூட்டுறவு கமிஷன் அமைத்துள்ளன. இதில், 6 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த 6 நாடுகளிலும் இதுவரை வருமான வரி இல்லை. கச்சா எண்ணெய் வளம் குறைந்து வருவதால் வேறு வருமானம் தேட வேண்டிய நிலையில் வளைகுடா நாடுகள் உள்ளன. இந்நிலையில் முதல் முறையாக வருமான வரியை அறிமுகப்படுத்த ஓமன் அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி 2028ம் ஆண்டு முதல் 5 சதவீதம் வரி விதிக்கப்படும். ஆண்டுதோறும் சுமார் ரூ.93.5லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5 சதவீத வருமான வரி விதிக்கப்படும். ஓமனை பின்பற்றி மற்ற வளைகுடா நாடுகளும் வருமான வரி விதிக்குமா என்பது விரைவில் தெரியும்.

The post வளைகுடா நாடுகளில் முதல் முறையாக ஓமனில் 5% வருமான வரி அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Gulf ,Oman ,Dubai ,Gulf Cooperation Commission ,Dinakaran ,
× RELATED பயணத்தடை கட்டுப்பாடுகள் பட்டியலில் மேலும் 20 நாடுகள்: அமெரிக்கா அதிரடி