×

56வது லீக் போட்டியில் இன்று மும்பையின் வெற்றிக் கோட்டை தகர்க்குமா குஜராத் சாட்டை?

மும்பையில் இன்று இரவு நடைபெறும் 56வது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைடன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. ஏற்கனவே மார்ச் 29ம் தேதி இவ்விரு அணிகளும் மோதிய, 9வது லீக் போட்டியில், குஜராத் 36 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. அந்த போட்டியுடன் ஐபிஎல் போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தி உள்ளன. அவற்றில் குஜராத் 4, மும்பை 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

அந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக குஜராத் 233, மும்பை 218 ரன் வெளுத்துள்ளன. குறைந்தபட்சமாக குஜராத் 172, மும்பை 152 ரன் விளாசி இருக்கின்றன. இந்த 2 அணிகளும் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் குஜராத் வென்றுள்ளது. மும்பை அணி இதுவரை, 11 போட்டிகளில் ஆடி, 7ல் வென்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.

குஜராத் இதுவரை விளையாடிய 10 லீக் போட்டிகளில் 7ல் வென்று 14புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் மும்பை வென்றால் 2ம் இடத்தையும், குஜராத் வென்றால், 3ம் இடத்தையும் பிடிக்கும். மும்பை களங்களில், இந்த 2 அணிகளும் மோதிய 2 போட்டிகளிலும் மும்பையே வென்றது வரலாறு.

 

The post 56வது லீக் போட்டியில் இன்று மும்பையின் வெற்றிக் கோட்டை தகர்க்குமா குஜராத் சாட்டை? appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Mumbai ,56th league match ,Mumbai Indians ,Gujarat Titans ,56th IPL league match ,league ,Dinakaran ,
× RELATED 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி.ஓபனில் அதிரடி காட்ட தயாராகும் வீனஸ்