×

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு ரூ.1.98 லட்சம் கோடி

புதுடெல்லி: ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 2023ம் ஆண்டில், ஜிஎஸ்டி புலனாய்வு பொது இயக்குனரகம் (டிஜிஜிஐ) 6,323 ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்குகளை கண்டறிந்துள்ளது. இதன் மூலம், ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 324 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.28,362 கோடி வரியை தாமாக முன்வந்து செலுத்தி உள்ளனர்.

இந்த வரி ஏய்ப்பில் மூளையாக செயல்பட்ட 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் கேமிங், கேசினோக்கள், காப்பீடு உள்ளிட்ட துறைகளில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு அதிகம் நடந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு, 4,273 வரி ஏய்ப்பு வழக்குகள் மூலம் ரூ.90,499 கோடி வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டது. தற்போது வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு ஆண்டுக்கு ஆண்டு 119 சதவீதம் அதிகரித்துள்ளது. தாமாக முன்வந்து வரி செலுத்துவோர் எண்ணிக்கை 26 சதவீதம் அதிகரித்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

The post ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு ரூ.1.98 லட்சம் கோடி appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Union Finance Ministry ,Directorate General of GST Investigation ,DGGI ,Dinakaran ,
× RELATED LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு...