×

துணைநிலை ஆளுநர் தொடர்ந்த வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை, ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2000வது ஆண்டில் சர்தர் சரோவர் அணைக்கு எதிரான போராட்டத்தின் போது, சிவில் உரிமைகளுக்கான தேசிய சங்கத்தின் தலைவராக இருந்த வி.கே.சக்சேனாவுக்கு எதிராக மேதாபட்கர் கருத்து தெரிவித்தார். குறிப்பாக, குஜராத்தையும், அம்மாநில மக்களையும் பில்கேட்ஸ் போன்ற பெரு முதலாளிகளிடம் அடகு வைத்து விட்டார் வி.கே.சக்சேனா என ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டார். இதனையடுத்து மேதா பட்கருக்கு எதிராக வி.கே.சக்சேனா அகமதாபாத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இதையடுத்து இந்த வழக்கானது 2003ம் ஆண்டு டெல்லி சாகேத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு பல்வேறு காலகட்டங்களில் விசாரணை செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 24ம் தேதி மேதா பட்கர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியதோடு, தண்டனை விவரத்தை வேறு தேதியில் அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சாகேத் நீதிமன்ற நீதிபதி ராகவ் சர்மா மேற்கண்ட வழக்கில் தண்டனை விவரத்தை வழங்கினார். அதில், “ டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தொடர்ந்த அவதூறு வழக்கில் சமூக ஆர்வலர் மேத்தா பட்கருக்கு ஐந்து மாதம் சிறை தண்டனை என்றும், அதேப்போன்று ரூ.10 லட்சத்தை அபராதமாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

The post துணைநிலை ஆளுநர் தொடர்ந்த வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை, ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Medha Bhatkar ,Lt ,Governor ,Delhi Court ,NEW DELHI ,Sardar Sarovar dam ,Medhaphatkar ,VK Saxena ,National Association for Civil Rights ,Gujarat ,Billcats ,Medha Patkar ,Lt. ,Dinakaran ,
× RELATED சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை