×

ஜெர்மனியில் ஏவுகணைகள் நிறுத்தினால் ரஷ்யா ஆயுதங்களை குவிக்கும்: அமெரிக்காவுக்கு புடின் எச்சரிக்கை

மாஸ்கோ: கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உதவிகளை அளித்து வருகின்றன.இதனால் ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரேன் அடிக்கடி பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவும் ஜெர்மனியும் வெளியிட்ட கூட்டறிக்கையில்,உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில்,ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு அமெரிக்காவின் எஸ்எம்- 6 ஏவுகணைகள், தோமஹாக் அதிவேக ஏவுகணைகளை ஜெர்மனியில் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த கடற்படை விழாவில் அதிபர் புடின் நேற்று பேசுகையில்,‘‘ அமெரிக்கா இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தினால், எங்கள் கடற்படையின் கடலோர படைகளின் திறன் அதிகரிக்கப்படும். இடைநிலை மற்றும் குறைந்த தூர தாக்குதல் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு விதிக்கப்பட்ட ஒருதலைப்பட்ச தடையிலிருந்து விடுபடுவோம். இதற்கு பதிலடி கொடுப்பதற்கான ஆயுதங்கள் தயாரிப்பு திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது’’ என்றார். ரஷ்ய வெளியுறவு துணை அமைச்சர் செர்ஜி ரிப்கோவ் சில நாள்களுக்கு முன் கூறுகையில், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக அணு ஆயுத ஏவுகணைகள் குவிப்பதை மறுப்பதற்கு இல்லை என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஜெர்மனியில் ஏவுகணைகள் நிறுத்தினால் ரஷ்யா ஆயுதங்களை குவிக்கும்: அமெரிக்காவுக்கு புடின் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Russia ,Germany ,Putin ,US ,Moscow ,Ukraine ,United States ,America ,Dinakaran ,
× RELATED ரஷ்ய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு