- காந்தி
- வெளியுறவு அமைச்சர்
- ஜெய்ஷங்கர்
- டோக்கியோ
- குவாட்
- ஜப்பான்
- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
- தூதர்
- கம்யூனிஸ்ட்
- ஜார்ஜ்.
- எடோகாவா
- வெளியுறவு அமைச்சர்
- தின மலர்
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் இன்று நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று டோக்கியோ வந்தார். அவரை ஜப்பானுக்கான இந்திய துாதர் சிபி ஜார்ஜ் வரவேற்றார். டோக்கியோவில் எடோகாவா என்ற இடத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஜெய்சங்கர் பதிவிடுகையில்:
மகாத்மாவின் சாதனைகள் இப்போதும் நம்மை ஊக்குவிக்கின்றன. அமைதி மற்றும் அகிம்சை கொள்கைகள் காலத்தால் அழியாததது.உலகில் மோதல்கள், வன்முறைகள், பிளவுபடுத்தும் செயல்கள் ஆகியவை மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றன. காந்தியின் கொள்கைகள் இன்றைய சூழ்நிலையில் மிக பொருத்தமானதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அந்தோனி பிளிங்கனை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
The post காந்தியின் கொள்கைகள் இன்றைக்கும் பொருத்தமானது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு appeared first on Dinakaran.