×

இன்ப விடுதலைக்காகத் துன்பச் சிறையைத் துச்சமென நினைத்த அந்தச் செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து முதல்வர் வெளியிட்டுள்ள சமுக வலைதளப்பதிவில்:
தமிழ்ப் பற்று – ஈகையுணர்வு – விடுதலைத் தாகம் ஆகியவை கொண்டு வரலாற்றிலும் தமிழர் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் அவர்களது நினைவு நாளில், இன்ப விடுதலைக்காகத் துன்பச் சிறையைத் துச்சமென நினைத்த அந்தச் செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம்! அவரது தியாக வாழ்வை வணங்குவோம் என கூறியுள்ளார்.

The post இன்ப விடுதலைக்காகத் துன்பச் சிறையைத் துச்சமென நினைத்த அந்தச் செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Semmal ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,V.U.Chitambaranar ,Government of Tamil Nadu ,Kindi Gandhi Mandapam Complex, Chennai ,M.K.Stalin ,
× RELATED உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்களுக்கு...