×

தேர்தலுக்கு முன் வழங்கும் இலவசங்கள் ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையம் 4 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் பட்டுலால் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர்களுக்கு இலவசங்கள் தற்போது வழங்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாகவே அரசுகள் இலவசமாக பண விநியோகம் செய்வது என்பது மிகவும் கொடுமையானதாகும். குறிப்பாக ராஜஸ்தான், மபி வாக்களர்களை கவரும் வகையில் வரி செலுத்துவோரின் பணத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். அதனால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்,’’ என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட பொதுநல மனுவானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில அரசுகள், ஒன்றிய அரசு, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியோர் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

The post தேர்தலுக்கு முன் வழங்கும் இலவசங்கள் ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையம் 4 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Union Government ,Election Commission ,Supreme Court ,New Delhi ,Patulal ,
× RELATED பங்குசந்தை வீழ்ச்சியால் ரூ.9 லட்சம் கோடி இழப்பு