×

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட் ரத்து

டாக்கா: வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்கும் முடிவை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதில் பெருமளவில் வன்முறைகள் அரங்கேறின. இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து வங்கதேசத்தில் பொருளாதார நிபுணர் டாக்டர். முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. ஷேக் ஹசீனா மீது 42 கொலை வழக்குகள் உள்பட 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் அனைத்து தூதரக பாஸ்போர்ட்களையும் ரத்து செய்து வங்கதேச இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் ஷேக் ஹசீனா அமைச்சரவையில் இருந்த அனைத்து எம்பிக்கள் மற்றும் அவர்களுடைய மனைவிகள் வைத்திருந்த பாஸ்போர்ட்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

The post வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட் ரத்து appeared first on Dinakaran.

Tags : Sheikh Hasina ,Dhaka ,Bangladesh ,
× RELATED அரசியல் கருத்துகளை சொல்வது நட்புறவை...