×

வௌியுறவு செயலாளர் மிஸ்ரி அமெரிக்க அதிகாரியுடன் பேச்சுவார்த்தை

நியூயார்க்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மூண்ட போர் கடந்த 10ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த போர் நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் முதலில் வௌியிட்டார். மேலும் இந்தியா பாகிஸ்தான் நாடுகள் போரை நிறுத்த தானே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கு ஒன்றிய பாஜ அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்த முடிவை அமெரிக்கா வௌியிட்டது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த சூழலில் ஒன்றிய வௌியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். நேற்று வாஷிங்டன் சென்றடைந்த மிஸ்ரி அங்கு அமெரிக்க நிர்வாகத்தின் பல்வேறு மூத்த அதிகாரிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து அமெரிக்க வௌியுறவு துணை செயலாளர் ஜெப்ரி கெஸ்லரை சந்தித்த விக்ரம் மிஸ்ரி, இந்தியா அமெரிக்கா இடையே ராணுவம் உள்பட பல்வேறு முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து வாஷிங்டன்னில் உள்ள இந்திய தூதரகம் தன் எக்ஸ் பதிவில், “முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்தியா அமெரிக்கா இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்த சந்திப்பு நடந்தது” என தெரிவித்துள்ளது.

The post வௌியுறவு செயலாளர் மிஸ்ரி அமெரிக்க அதிகாரியுடன் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Foreign Secretary ,Misri ,US ,New York ,India ,Pakistan ,Pahalgam attack ,President Trump ,Dinakaran ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...