
தேனி: வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. கம்பம், கடலூர் பகுதியில் 2 நாட்களாக மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, மிகவும் பிரபலமான சற்றுலா தலமாக விளங்குகிறது. மேலும் அங்குள்ள கைலாசநாதர் குகை, பூதநாரயணன் கோயில், ஆதி அண்ணாமலையார் கோவில் ஆகியவற்றை காண ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் சுருளி அருவிக்கு வந்து செல்வது வழக்கம்.
சுருளி அருவிக்கு ஹைவேவிஸ் தூவானம் அணை தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி வற்றுத் தண்ணீர் வருகிறது. இந்நிலையில் கன மழையின் காரணமாக சுருளி அருவியில் நேற்று இரவு முதல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இன்று காலை வரை குறையாததால், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக அறிவுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலையில் அருவியில் தண்ணீர் வரத்து குறையாததால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, தற்காலிகமாக அருவியில் குளிக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அருவியின் நீர் வரத்து சீரானதும் மீண்டும் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதிப்பு appeared first on Dinakaran.
