×

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை

மதுரை: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. விபத்துக்கு ஆலை உரிமையாளர் காரணமாக இருந்தால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. மேலும், ஆலைகளின் உரிமம், பாதுகாப்பு அலுவலர் நியமனம், தொடர் ஆய்வு உள்ளிட்ட விதிகளை ஆலையை பின்பற்றுகிறதா என அரசு உறுதி செய்ய வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு பணிகளை அமல்படுத்த வேண்டும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் மனைவியர் அரசு சத்துணவு மையம், விடுதிகளில் வேலை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

The post பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : Aycourt Branch ,Madurai ,High Court ,iCourt ,Icourt branch ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!