×

தொடரும் விவசாயிகள் போராட்டம்; அரியானாவில் முடக்கப்பட்ட இணைய சேவை தொடக்கம்: நொய்டாவில் 144 தடை உத்தரவு

சண்டிகர்: விவசாயிகள் போராட்டம் தொடரும் நிலையில் அரியானாவில் முடக்கப்பட்ட இணைய சேவை தொடங்கப்பட்டது. நொய்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, சம்யுக்த கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா விவசாய கூட்டமைப்புகள் சார்பாக ‘டெல்லி செல்வோம்’ என்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பஞ்சாப் மற்றும் அரியானா எல்லைப் பகுதிகளான ஷம்பு மற்றும் கனெளரியில் விவசாயிகள் திரண்டுள்ளனர். அவர்கள் ெடல்லிக்குள் நுழையாத வகையில், சாலைகளில் டெல்லி காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் விவசாயிகளுக்கும், அரியானா காவல் துறைக்கும் கடந்த புதன்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியைச் சோ்ந்த ஷுப்கரண் சிங் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், விவசாயிகள் விடுத்த 2 நாட்கள் கெடு இன்றுடன் முடிந்தது. அதனால் நாளை விவசாயில் தங்களது ‘டெல்லி செல்வோம்’ போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அரியானாவில் 7 மாவட்டங்களில் முடக்கப்பட்டிருந்த இணைய சேவை மீண்டும் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

The post தொடரும் விவசாயிகள் போராட்டம்; அரியானாவில் முடக்கப்பட்ட இணைய சேவை தொடக்கம்: நொய்டாவில் 144 தடை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Haryana ,Noida ,Chandigarh ,Union Government ,Samyukta ,Dinakaran ,
× RELATED தேர்தலில் சீட் மறுப்பு அரியானாவில்...