×

பொய் புகார் தருவோர் மீது நடவடிக்கை கோரி ஐகோர் கிளை வழக்கு!!

மதுரை: அரசு அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்களுக்கு எதிராக பொய் புகார் தருவோர் மீது நடவடிக்கை கோரி வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல்துறை ஆணையாளருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு வழக்கறிஞர்கள் பெயரை பயன்படுத்தி போலியான பல புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. நீதிபதிகளுக்கும் இது போன்று பொய் புகார் சென்றுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அமலன் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

The post பொய் புகார் தருவோர் மீது நடவடிக்கை கோரி ஐகோர் கிளை வழக்கு!! appeared first on Dinakaran.

Tags : ICOR BRANCH ,Madurai ,High Court Branch ,Madurai Municipal Police ,Commissioner ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...