- முதல்வர்
- அமைச்சர்
- லவ் மகேஷ்
- சென்னை
- இடைநிலைப் பதிவு மூத்த ஆசிரியர்கள் சங்கம்
- சென்னை டி.பி.ஐ
- அன்பான மகேஷ்
சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பு மற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 3 சங்கங்களுடன் பேச்சுவார்த்தையை நிறைவு செய்யும் விதமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது வீட்டில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஒவ்வொரு சங்கங்களின் பிரதிநிதிகள் தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. அதன்படி மூன்று ஆசிரியர் சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
அதன் காரணமாக மூன்று ஆசிரியர் சங்கத்தினரும் தங்களது தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடர போவதாக அறிவித்துள்ளனர். பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்னர் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ராபர்ட் அளித்த பேட்டி: 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண்ணான 311-ல் எங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்ற கோரி தான் தற்போது நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
மேலும் 3ம் கட்டமாக நடந்த இந்த பேச்சுவார்த்தை சற்று முன்னேற்றத்துடன் நிறைவடைந்து உள்ளது. எங்களது கோரிக்கைகள் முதலமைச்சரிடம் எடுத்துச் செல்லப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் இன்று இரவே எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவிப்பை வெளியிட்டால், போராட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு நாளை என்னும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ள தயாராக உள்ளோம். இல்லையெனில் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேபோல, 2013ம் ஆண்டு டெட் தேர்வு ஆசிரியர் சங்க கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.
The post பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் முதல்வருடன் ஆலோசனை நடத்தி ஆசிரியர்கள் கோரிக்கைக்கு தீர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி, போராட்டம் தொடரும் என அறிவிப்பு appeared first on Dinakaran.