×

சென்னையில் “தொழில் முனைவோர்- டிஜிட்டல் மார்க்கெட்டிங்’ தொடர்பான நேரடிப் பயிற்சி வகுப்புகள்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தொழில்முனைவோர் – மின்னணு ஊடகம் மூலமாக -சந்தைப்படுத்துதல் தொடர்பான பயிற்சி தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் “தொழில் முனைவோர்- டிஜிட்டல் மார்க்கெட்டிங்’ தொடர்பான வகுப்புப் நேரடிப் பயிற்சியானது 21.08.2024 முதல் 23.08.2024 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை இந்நிறுவன கட்டிட வளாகத்தினுள் நடைபெற உள்ளது.

“தொழில்முனைவோர்-டிஜிட்டல் மார்க்கெட்டிங் அறிமுகம் டிஜிட்டல் மார்க்கெட்டிங், தரவு கையாளுதல், சைபர் கொள்கை (விதிமுறைகள் & நிபந்தனைகள்) மார்க்கெட்டிங் உத்திகள், போட்டி சந்தைப்படுத்துதல், சமூக ஊடக தரவு, டிஜிட்டல் இருப்பு, தேவை மற்றும் வாடிக்கையாளர்களை இணைத்தல், டிஜிட்டல் ஆன்லைன் கருவிகள் மற்றும் ஆதரவு அமைப்பு ஆகியவை தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்ட பாடங்கள்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் அறிமுகம்: அடிப்படை, போக்குகள் மற்றும் முக்கியத்துவம், டிஜிட்டல் நிலப்பரப்பைப் புரிந்துகொள்வது: சமூக ஊடகங்கள், எஸ்.சி.ஓ மற்றும் கட்டண விளம்பரம், இலக்கு பார்வையாளர்களை அடையாளம் காணுதல்: உத்திகள் மற்றும் பார்வையாளர்களைப் பிரித்தல், டிஜிட்டல் இருப்பை உருவாக்குதல், சந்தை தேவைகளை உருவாக்குதல், வருவாய் மற்றும் வருவாய் மாதிரிகளை உருவாக்குதல், டிஜிட்டல் வணிக தீர்வுகள், இணைப்பு மற்றும் நெட்வொர்க்குகள் போன்ற பாட தலைப்புகள்பயிற்சியில் இடம்பெறும்.

ஆர்வமுள்ளவர்கள் (ஆண் / பெண்/ திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/ திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இப்பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032. 044-22252081 / 22252082 / 8668100181 / 9841336033 முன்பதிவு அவசியம்.

The post சென்னையில் “தொழில் முனைவோர்- டிஜிட்டல் மார்க்கெட்டிங்’ தொடர்பான நேரடிப் பயிற்சி வகுப்புகள்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Government Entrepreneurship Development and Innovation Institute ,Tamil Nadu Government ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...