சென்னை: அமலாக்கத் துறை நோட்டீசுக்கு 30 நாட்களில் பதிலளிக்க பிளிப்கார்ட் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி ரூ.10,601 கோடி நேரடி அந்நிய முதலீட்டை பெற்றதாக பிளிப்கார்ட், அதன் துணை நிறுவனங்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. 2009 முதல் 2011 வரை அந்நிய செலாவணி விதிகளை மீறி, ரூ.10 ஆயிரத்து 601 கோடி நேரடி அந்நிய முதலீட்டை பெற்றதாக கூறி அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து, பிளிப்கார்ட், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்கள் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நோட்டீசுக்கு பதிலளிக்காமல் நீதிமன்றத்தை அணுகி இருக்க கூடாது என்ற ED வாதத்தை ஏற்று மனு தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
The post அமலாக்கத்துறை நோட்டீசுக்கு flipkart பதில்தர ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.
