×

28ல் முடிகிறது அக்னி நட்சத்திரம்

சென்னை: அக்னி நட்சத்திரம் 28ம் தேதியுடன் முடிவடைகிறது. படிப்படியாக வெப்பம் குறைய வாய்ப்புள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கோடையின் தாக்கம் தொடங்கியது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடந்த மார்ச் மாதம் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தத் தொடங்கியது. இந்நிலையில் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது. இது மே 28ம் தேதி வரை நீடிக்கும்.

இதற்கிடையே, கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் ேபாக்கு அடிக்கடி மாறியதால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கியது. அதனால் அக்னி வெயில் காலத்தில் உணர வேண்டிய வெப்பத்தின் தன்மை குறைந்து குளிர் காற்று வீசி வருகிறது. இதற்கிடையே, ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவமழையும் ஒரு வாரம் முன்னதாக தொடங்கியுள்ளதால், தமிழகத்திலும் அந்த மழை பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்னும் 3 நாட்களில் அக்னி நட்சத்திரம் முடிவடைய உள்ள நிலையில் வெப்பத்தின் தாக்கமும் குறையும் அளவுக்கு மெழை பெய்யப்போகிறது. அதனால் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாமல் முடியப் போகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாகவும் படிப்படியாக வெப்பம் குறையத் தொடங்கும் வாய்ப்புள்ளது.

The post 28ல் முடிகிறது அக்னி நட்சத்திரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Agni Starr ,Tamil Nadu ,Agni ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...