×

மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி


சென்னை: மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா; 1.25 லட்சம் கோடி அளவிற்கான மின்னணு பொருட்கள் உற்பத்தி இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்றது. மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்புத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ஒன்றிய அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு இணையாக இந்த திட்டத்தில் grant வழங்கப்பட்டுள்ளது.

ஊக்கத்தொகை கொடுக்கிறோம் என்று உறுதி அளித்துவிட்டு தமிழ்நாடு அரசு கொடுக்காமல் இருந்ததில்லை. திட்டத்தின் மூலம் ரூ.30,000 கோடி முதலீடுகளை ஈர்க்க முடியும்; 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 100 மில்லியன் டாலர் இலக்கை தொட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் முதல் மாநிலமாக மின்னணு உதிரி பாகங்கள் சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். முதலீட்டாளர்களுக்கு நம்பகத்தன்மை உள்ள காரணத்தினால் தமிழ்நாட்டை நோக்கி அதிக முதலீடுகள் வந்துள்ளன என்று கூறினார்.

The post மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Minister ,T.R.P. Raja ,Chennai ,Tamil ,Nadu ,Chennai Secretariat ,
× RELATED அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்;...