×

நாட்டிலேயே அதிக மின்சாரம் வழங்கும் மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடம்: மாநிலங்களவையில் ஒன்றிய அரசு பதில்

டெல்லி: நாட்டிலேயே பயனாளர்களுக்கு சராசரி மின்சாரத்தை அதிக அளவில் வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்கள் வாரியாக சீராக வழங்கப்பட்டு வருவது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் சாமிக் பட்டாச்சார்யா கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ஒன்றிய மின்சாரத்துறை இணை அமைச்சர் ; தீன் தயாள் உபத்யாயா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 18,374 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சௌபாக்கியா திட்டத்தின் கீழ் 2.86 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு திட்டங்களில் கீழ் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்கக்கூடிய முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் நகர்ப்புற பகுதிகள் மற்றும் கிராம புறங்களில் வழங்கப்படும் மின்சாரம் பற்றி ஒன்றிய இணை அமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி 2023-24ம் நிதியாண்டில் தேசிய அளவில் நகர்ப்புற பகுதிகளுக்கு தினசரி 23.4மணி நேரமும், கிராம புரங்களுக்கு 21.9 மணி நேரமும் மின்சார விநியோகம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அதிகபட்சமாக தமிழ்நாடு, தெலங்கானா, டெல்லி ஆகிய 3 மாநிலங்கள் நகர்ப்புறங்களுக்கு 24 மணி நேரமும் சராசரி மின்சாரம் வழங்கி இருப்பதாகவும் அதே நேரத்தில் கிராம புறங்களில் சராசரி மின்சாரத்தை அதிக அளவில் வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதாகவும், ஒன்றிய இணை அமைச்சர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கிராம புறங்களுக்கு சராசரியாக 23.5 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

 

The post நாட்டிலேயே அதிக மின்சாரம் வழங்கும் மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடம்: மாநிலங்களவையில் ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,EU government ,Delhi ,Samik Bhattacharya ,Union Government ,
× RELATED சுங்கச்சாவடிகளுக்கு டாட்டா…....