×

வாசகர் பகுதி-மின்சார சிக்கனம்!

நன்றி குங்குமம் தோழி

தற்பொழுது மின்சார பயன்பாடு மட்டுமில்லை அதன் கட்டணமும் அதிகமாகிவிட்டது. மின்சார சாதனங்களை எவ்வாறு எளிய முறையில் பயன்படுத்தி கட்டணத்தை கட்டுக்குள் வைக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம். முன்னர் பொருத்தப்பட்ட மீட்டர்கள் மேக்னடிக் மூலம் ஒரு சக்கரம் சுழலும். அது மிகச்சிறிய அளவு ‍செலவாகும் மின்சாரத்தை கணக்கில் கொள்ளாது. ஆனால் தற்போது எல்லா மின் இணைப்புகளுக்கும் ஸ்டேடிக் (Static) மீட்டர்கள் பொருத்தப்படுகின்றது. இவை துல்லியமாக மின்சார செலவினை கணக்கிடும். மொபைல் சார்ஜர் பயன்படுத்திவிட்டு மறந்து ஸ்விட்சினை அணைக்காமல் இருந்தாலும் மின்கணக்கீடுகளை இந்த மீட்டர்கள் துல்லியமாக செய்கின்றன.

* ரிமோட்டில் ‍அணைக்கப்பட்ட சாதனங்களில் ஸ்டேன்ட்பை மோடில் செலவாகும் மின்சாரத்தையும் மிகச்சரியாக கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. ரிமோட் கொண்டு அணைத்தாலும், அதன் ஸ்விட்சினை நாம் அணைக்க தவறக்கூடாது.

* இரவு விளக்கிற்கு ஜீரோ வாட்ஸ் பல்புகள் பயன்படுத்தும் போது, காலை எழுந்தவுடன் அணைத்துவிட வேண்டும். அதில் இருந்து 5 முதல் 10 வாட்ஸ் மின்சாரம் செலவாகும்.

* எல். இ. டி விளக்கு, ஒரு டியூப் லைட் 40 வாட்ஸ் வரை மின்சாரம் செலவிடக்கூடியது. அதற்கு பதிலாக எல்.இ.டி பல்புகள் 20 வாட்ஸில் அதே அளவு வெளிச்சத்தை தரவல்லது.

* குளிர் சாதனப் பெட்டி, இல்லாத வீடே இல்லை. இவற்றிற்கு சீராக மின்வினியோகம் செய்யும் ஸ்டெபிலைசரை பலர் அணைத்து வைப்பதில்லை.

* மின் சார்ஜிங் உபகரணம், கைபேசி, சார்ஜ் பேங்க், கொசு பேட், கொசு விரட்டி, இன்வர்ட்டர், வாக்குவம் கிளினர் என்று சார்ஜிங் செய்ய என்று நிறைய மின் சாதனங்கள் வந்து விட்டது. இதனை குறிப்பிட்ட நேரம் மட்டுமே சார்ஜ் செய்து மின் சிக்கன பலனை பெறலாம்.

தவிர்க்க வேண்டியவை…

* ஃப்ரிட்ஜ்ஜை அடிக்கடி திறந்து, மூடுவதை தவிர்க்கலாம்.

* ஃப்ரிட்ஜ் மற்றும் ஏசியை அடிக்கடி சுத்தம் செய்வது சிறந்தது.

* ஏசியை மிதமான குளிரில் வைப்பது நல்லது.

* மின்சாதனங்கள் வாங்கும் பொழுது நல்ல தரமான நட்சத்திர குறியீடு உள்ளதை வாங்குவது நல்லது.

* ஒரே அறையில் அமர்ப்ந்து உண்பது, பேசுவது, டிவி பார்ப்பது தேவையற்ற மின் உபகரணங்களின் பயன்பாட்டினை குறைக்கும்.

* வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, வெளியூர் செல்லும் போது மின்சார உபகரணங்களின் இயக்கத்தை நிறுத்தியிருப்பதை உறுதி செய்வது நல்லது.

* இன்டக் ஷன் ஸ்டவ் மற்றும் அடிக்கடி உணவை சூடு செய்து சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

– சுந்தரி காந்தி, சென்னை.

The post வாசகர் பகுதி-மின்சார சிக்கனம்! appeared first on Dinakaran.

Tags : kumkum ,doshi ,Dinakaran ,
× RELATED ‘குங்குமம் – தோழி’ இதழின் ஷாப்பிங்...