×

நான் உதவியிருக்காவிட்டால் தேர்தலில் தோற்றிருப்பார்; ட்ரம்ப் நன்றி கெட்டவர்: எலான் மஸ்க் கடும் விமர்சனம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய வரிக்குறைப்பு மசோதா விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் – தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. எம்.பி.க்கள் மசோதாவை படித்துவிடக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக நிறைவேற்றப்பட்டதாக எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். மசோதாவைப் பற்றி எலான் மஸ்க் முழுமையாக அறிந்திருந்தார் என ட்ரம்ப் பதில் அளித்துள்ளார். எலானின் விமர்சனத்தால் தான் ஏமாற்றம் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் “நான் உதவியிருக்காவிட்டால் தேர்தலில் தோற்றிருப்பார். ட்ரம்ப் நன்றி கெட்டவர்” எனவும் மஸ்க் விமர்சித்துள்ளார்.

The post நான் உதவியிருக்காவிட்டால் தேர்தலில் தோற்றிருப்பார்; ட்ரம்ப் நன்றி கெட்டவர்: எலான் மஸ்க் கடும் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Trump ,Elon Musk ,Washington ,President Trump ,United States ,M. B. ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள்...