- மோடி
- மார்க்சிஸ்ட்
- வேலூர்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- ஜி. ராமகிருஷ்ணன்
- பாஜா அரசாங்க ரிசர்வ்
- தேர்தல் ஆணையம்
வேலூர்: வேலூரில் நேற்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துக் கொண்டார். பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒன்றியத்தில் உள்ள பாஜ அரசு ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் உட்பட ஐந்து சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து, நாட்டின் அடிப்படை தன்மையை சிதைத்து விட்டது. குறிப்பாக ₹20 ஆயிரத்துக்கு மேல் தேர்தல் நிதி வாங்கினால், அதனை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற சட்டத்தை திருத்தி ஆயிரக்கணக்கான கோடிகளை இவர்கள் தேர்தல் பத்திரம் மூலமாக நிதியாக பெற்றிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவற்றை அனுப்பி மிரட்டி பெருநிறுவனங்களிடம் அதிக நன்கொடை பெற்றுள்ளனர்.
இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட், அந்த திருத்தங்கள் செல்லாது எனவும், கட்சிகள் நிதியை யாரிடம் பெற்றன என்ற விவரத்தை அறிவிக்க கோரியுள்ளது. ஆனால் பிரதமர் மோடி, பாஜ கட்சி தலைவர் அமித்ஷா என யாரும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. எனவே, பிரதமர் மோடி நாளை(இன்று) தமிழகம் வரும்போது, தேர்தல் பத்திரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து தனது கருத்தை தெரிவிப்பாரா? என்று கேட்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post தேர்தல் பத்திரங்கள் வாய் திறப்பாரா மோடி? மார்க்சிஸ்ட் கேள்வி appeared first on Dinakaran.