×

இணையவழி விளையாட்டு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் யார்? தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு

சென்னை: தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அமைத்து தலைவர், உறுப்பினர்களை அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்டத்தினை தடுக்கும் வகையில், தலைவர், உறுப்பினர்கள் உள்ளடக்கிய தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் ஒன்றினை அமைத்து 18.8.2023 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது:
1. முகமது நசிமுதீன் (ஐஏஎஸ் ஓய்வு) – தலைவர்
2. எம்.சி.சாரங்கன் (ஐபிஎஸ் ஓய்வு) – உறுப்பினர்
3. சி.செல்லப்பன், பேராசிரியர் (ஓய்வு), பொறியியல் கல்லூரி, கிண்டி – உறுப்பினர்
4. ஓ.ரவீந்திரன், உளவியல் மருத்துவர் (ஓய்வு), ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி, போரூர் – உறுப்பினர்
5. விஜய் கருணாகரன், நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர், இன்கேஜ் குழு – உறுப்பினர் இந்த ஆணையமானது, 15.9.2023 அன்று முதல், ‘‘தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் முதல் மாடி, நகர்ப்புற நிர்வாக கட்டிடம், எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி.நகர்,ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28’’ என்ற முகவரியில் செயல்பட துவங்கியுள்ளது.

The post இணையவழி விளையாட்டு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் யார்? தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு appeared first on Dinakaran.

Tags : eSports Commission ,Tamil Nadu Government ,Chennai ,Tamil Nadu E-Sports Commission ,e-sports commission ,
× RELATED மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்: வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு