- வரமதி
- OPS
- காஞ்சிபுரம்
- அஇஅதிமுக
- பெரும்பாக்கம் ராஜசேகர்
- மாமல்லபுரம் ஈசிஆர்
- அமைச்சர்
- வராகத்தி
- திமுக
- விளாசிய வரமதி
- தின மலர்
காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் பெரும்பாக்கம் ராஜசேகருக்காக செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரம் இசிஆர் நுழைவாயிலில் நேற்று நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசுகையில், வாக்கு சேகரிக்கும்போது திமுக வேட்பாளர் பெயரை குறிப்பிடாதீர்கள். அவர் பெயரை குறிப்பிட்டால் திமுக வேட்பாளருக்கு 1000 ஓட்டு கூடுதலாக விழும். நமக்கு 2 எதிரிங்க. ஒருத்தர் டெல்லியில் இருந்து வர்றார். இன்னொருவர், சென்னையில் இருந்து வருகிறார்.
இதைவிட முக்கியமான எதிரி ஓபிஎஸ். இரட்டை இலையை முடக்க போராடிக் கொண்டிருக்கிறான். வெத்துவேட்டு, புஸ்வாணம். இவன், சும்மாவே இருக்க மாட்டான். வாளி சின்னம் குடுத்துட்டாங்க.. அதுல தண்ணி பிடிச்சிட்டு தூக்கிட்டு ஓட வேண்டியது தானே. அப்புறம், எதுக்குடா இரட்டை இலையை முடக்க கோர்ட்டுக்கு ஓடுற. சொறி புடிச்சவன் கை சும்மா இருக்காது. சொறிஞ்சிட்டே இருப்பான். அந்த மாதிரி தான் ஓபிஎஸ் கதையும் பரிதாபமா இருக்கு என்றார்.
The post எதுக்கு இரட்டை இலையை முடக்க வர்றான்; வாளி சின்னம் குடுத்துட்டாங்க.. அதுல தண்ணி புடிச்சி தூக்கிட்டு ஓட வேண்டியது தான…!!? ஓபிஎஸ்சை விளாசிய வளர்மதி appeared first on Dinakaran.