×

திமுக ஆட்சியில் 2000-மாவது கோயில் குடமுழுக்கு விழா வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் ஆக.30ல் நடைபெறுகிறது: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான, திமுக ஆட்சியில் 2,000-மாவது கோயில் குடமுழுக்கு விழா மயிலாடுதுறை, வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் வருகிற ஆக.30ம் தேதி நடைபெற உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் பெட்டகங்களாக திகழும் தொன்மையான கோயில்களைப் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 2,000-வது குடமுழுக்காக மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், பரசலூர்,
வீரட்டேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு வருகின்ற 30ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை தனது ஆளுகைக்குட்பட்ட தொன்மையான கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்கு நடத்துதல், திருக்குளங்கள், திருத்தேர்கள் மற்றும் நந்தவனங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், கோயில்களின் வருவாய் இனங்களை முறைப்படுத்தி வசூலித்தல் போன்ற பல்வேறு பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருகிறது.

கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். அதன்படி, குடமுழுக்குகள் நடைபெறாத கோயில்களை கண்டறிந்து திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தும் பணிகளை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த அரசு பொறுப்பேற்றபின் கடந்த 39 மாதங்களாக இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. நேற்று வரை 1,983 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன. இதில் 1,000-வது குடமுழுக்காக சென்னை, மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் குடமுழுக்கு 10.09.2023 அன்றும், 1,500-வது குடமுழுக்காக கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு, வடபுத்தூர், வன்னிகுமார சுவாமி கோயில் குடமுழுக்கு 24.03.2024 அன்றும் தவத்திரு ஆதீன பெருமக்கள். ஆன்மிக பெரியோர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு 400 ஆண்டுகளுக்கு பிறகும், காஞ்சிபுரம் மாவட்டம். சாத்தனஞ்சேரி. கரியமாணிக்க வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு பிறகும், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், தக்கோலம், கங்காதீஸ்வரர் கோயிலுக்கு சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகும், திருநெல்வேலி மாவட்டம், அரிகேசவநல்லூர், பெரியநாயகி சமேத அரியநாத சுவாமி கோயிலுக்கு 123 ஆண்டுகளுக்கு பிறகும், வேலூர் மாவட்டம், வெட்டுவானம், திரௌபதியம்மன் கோயிலுக்கு 110 ஆண்டுகளுக்கு பிறகும், ஐந்து திருக்கோயில்களுக்கு 100 ஆண்டுகளுக்கு பிறகும், ஆறு கோயில்களுக்கு 70 ஆண்டுகளுக்கு பிறகும், 16 திருக்கோயில்களுக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகும், 15 கோயில்களுக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

முதலமைச்சர் 1,000 ஆண்டுகள் முற்பட்ட தொன்மையான கோயில்களை புனரமைத்து திருப்பணி மேற்கொள்ள 2022 – 2023ம் நிதியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.300 கோடியை அரசு மானியமாக வழங்கி உள்ளார். அதன்படி 2022 2023ம் நிதியாண்டில் ரூ.158 கோடி மதிப்பீட்டில் 113 தொன்மையான கோயில்களும், 2023 24 ஆம் நிதியாண்டில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 84 கோயில்களும் அரசு மானியம், திருக்கோயில் நிதி மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராமப்புற கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோயில்களுக்கு பழங்குடியினர் திருப்பணிகள் மேற்கொள்ள ஆண்டுதோறும் தலா 1,000 என்ற எண்ணிக்கை 1,250 ஆகவும், நிதியுதவி தலா ரூ.1 லட்சம் என்பது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு இதுவரை 3,750 கிராமப்புற கோயில்களுக்கும் 3,750 ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோயில்களுக்கு ரூ. 150 கோடி திருப்பணி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

கிராமப்புற திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ஆண்டுதோறும் தலா 1,000 என்ற எண்ணிக்கை 1,250 ஆகவும், நிதியுதவி தலா ரூ.1 லட்சம் என்பது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு இதுவரை 3,750 கிராமப்புற கோயில்களுக்கும் 3,750 ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோயில்களுக்கு ரூ. 150 கோடி திருப்பணி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 9,415 கோயில்களில் ரூ.5,351.48 கோடி மதிப்பீட்டிலான 20,649 திருப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 8,276 திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மாநில வல்லுநர் குழுவால் 9,731 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

The post திமுக ஆட்சியில் 2000-மாவது கோயில் குடமுழுக்கு விழா வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் ஆக.30ல் நடைபெறுகிறது: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : 2000th Temple Kudarukku Ceremony ,Dimuka ,Pashuvur Weerateswarar Temple ,Minister ,Sekarbhabu ,Chennai ,Chief Minister ,Mu. K. Minister of ,Hindu ,Religious Affairs ,Shekarbabu ,2,000th Temple Gudal Festival ,Dima ,Stalin ,Mayiladudura ,Sekarbabu ,
× RELATED திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என...