×

பட்டாபிராமில் இன்று மாலை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் சா.மு.நாசர் அழைப்பு


ஆவடி: பட்டாபிராமில் டைடல் பார்க் திறப்பு விழாவுக்கு முதல்வரின் வருகையை முன்னிட்டு, இன்று மாலை பட்டாபிராமில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. என்று மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சா.மு.நாசர் அழைப்பு விடுத்துள்ளார். திருவள்ளூர் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் டைடல் பார்க் திறப்பு விழாவுக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். முதல்வரின் வருகையை முன்னிட்டு, திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் பட்டாபிராம் அருகே தண்டரை பகுதியில் ஜெய்கிரிஷ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் மா.ராஜி தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் மாநில ஆதிதிராவிடர் நலக் குழு செயலாளரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், மாநில மாணவரணி இணை செயலாளர் சி.ஜெரால்டு, மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் வி.ஜெ.சீனிவாசன், எஸ்.ஜெயபாலன், காயத்திரி ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் பா.நரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ். ஜி.ராஜேந்திரன், ஜி.விமல்வர்ஷன். எம்.முத்தமிழ்செல்வன், வி.குமார், ஜெ.மகாதேவன்,

காஞ்சனா சுதாகர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில், திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் அடங்கிய மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சா.மு.நாசர் அழைப்பு விடுத்துள்ளார்.

The post பட்டாபிராமில் இன்று மாலை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் சா.மு.நாசர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Batapram ,Minister Cha. M. Nassar ,Avadi ,Tidal Park ,Tiruvallur Central District Dimuka ,Bhatapram ,District Secretary ,Minister ,Chap. M. Nassar ,Cha. M. Nassar ,Dinakaran ,
× RELATED ஆவடி மாமன்ற கூட்டத்தில் 119 தீர்மானம் நிறைவேற்றம்