×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 70 ஆயிரம் பேர் முன்பதிவு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக தமிழ்நாடு போக்குவரத்து துறையின் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

வரும் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையில் சென்னையில் இருந்து தினசரி இயங்க கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,675 சிறப்பு பேருந்துகள் என 3நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 10,975 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 5,920 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,895 பேருந்துகள் இயக்கபடவுள்ளது. இதே போல் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகாக பிற ஊர்களில் இருந்து சென்னை வரும் பயணிகளுக்கு 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் தினசரி இயங்க கூடிய 2,100 பேருந்துகளுடன் 3,167 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 9,467 பேருந்துகள் இயக்க போக்குவரத்துதுறையின் சார்பில் திட்டமிடபட்டுள்ளது. இதேபோல் பிற ஊர்களுக்கு 3,825 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 13,292 பேருந்துகள் இயக்க திட்டமிடபட்டுள்ளது.

இந்த நிலையில், இதற்கான முன்பதிவு வேகமெடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்ல கூடிய பயணிகள் பெரும்பாலானோர் தொடர்ச்சியாக முன்பதிவு செய்து வருகின்றனர். அந்த அகையில் இதுவரையில் 70, ஆயிரம் பேர் இன்று காலை வரை முன்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. சென்னையில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தில் சொந்த ஊர் செல்வதற்கு தற்போதுவரை 46,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு 5.9 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 70 ஆயிரம் பேர் முன்பதிவு appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,Chennai ,Dinakaran ,
× RELATED 2030ம் ஆண்டிற்கான தொலைநோக்கு...