×

மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்: மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாநகர, ஒன்றிய, நகர, பகுதி பேரூர் திமுக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் காக்களூர் பைபாஸ் சாலையில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் ம.ராஜி தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணாசாமி எம்எல்ஏ, கே.ஜே.ரமேஷ்,

மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் சி.ஜெரால்டு, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் தொழுவூர் பா.நரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், ஜி.ராஜேந்திரன், ஜி.விமல்வர்ஷன், எம்.முத்தமிழ் செல்வன், வி.குமார், ஜெ.மகாதேவன், காஞ்சனா சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலளார் ஆர்.ஜெயசீலன் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆவடி சாமு.நாசர் எம்எல்ஏ கலந்து ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: வரும் செப்டம்பர் 15க்குள் ஒவ்வொரு பகுதியிலும் பொது உறுப்பினர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மினிட் புத்தகம் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தலைவர் கட்டளை இட்டிருக்கிறார். எனவே அனைத்து செயலாளர்களும் பொது உறுப்பினர் கூட்டம் நடத்தி, அடுத்த நாளே மினிட் புத்தகத்தை மாவட்ட நிர்வாகத்திடம் சேர்க்க வேண்டும்.

பொது உறுப்பினர் கூட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஒன்றிய, வார்டு, கிளை நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பிஎல்ஏ 2, பிஎல்சி ஆகியோர் கட்டாயம் பங்கேற்பதை உறுதி செய்யவேண்டும். திமுகவின் பவளவிழா நிறைவினை செப்டம்பர் 17ம் தேதி கொண்டாட இருப்பதால், 75 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் திமுக படைத்த சாதனைகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மகத்தான திட்டங்கள், திராவிட மாடல் அரசைத் திறம்பட நடத்திவரும் தமிழ்நாடு முதலமைச்சரின் மக்கள்நலத் திட்டங்கள் ஆகியவற்றை விளக்கிச் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட வேண்டும்.

மாவட்டம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்களை நடத்தி, மக்களிடம் திமுகவின் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும். திமுக கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அந்தந்தப் பகுதியில் அல்லும், பகலும் உழைத்த மூத்த முன்னோடிகளின் கரங்களால் நம் இருவண்ணக் கொடியை ஏற்ற வேண்டும். மேலும் தமிழ்நாட்டிலேயே திருவள்ளூர் மத்திய மாவட்டம் அதிக அளவில் உறுப்பினர் சேர்க்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி பேரூர் செயலாளர்கள் சன்.பிரகாஷ், டி.தேசிங்கு, டி.ராமகிருஷ்ணன், ஜி.ஆர்.திருமலை, சே.பிரேம் ஆனந்த், ப.ச.கமலேஷ், என்.இ.கே.மூர்த்தி, பேபிசேகர், பொன்.விஜயன், ஜி.நாராயண பிரசாத், தி.வே.முனுசாமி, ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

The post மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்: மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Central District DMK ,District Secretary ,CM Nassar ,Thiruvallur ,Central District DMK Municipal ,Union ,Area ,Perur ,DMK ,Kakalore Bypass Road ,District Assembly ,President ,M. Raji ,Chief Executive Committee ,CM Nasser ,Dinakaran ,
× RELATED பாசன வாய்க்கால்களையும் தூர்வார்வேண்டும்