×

கீழடி அகழாய்வில் செங்கல் கட்டுமானம் கண்டெடுப்பு

சிவகங்கை: கீழடியில் நடந்து வரும் 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் கட்டப்பட்ட செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் 10ம் கட்ட அகழாய்வில் இதுவரை 9 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பானை ஓடு, மீன் உருவ பானை ஓடுகள், பாசிகள், மணிகள், சுடுமண் பானைகள் என ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதிதாக தோண்டப்பட்ட குழியில் சுடுமண்ணால் கட்டப்பட்ட செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. கட்டுமான சுவரில் உள்ள ஒவ்வொரு செங்கலும் சுமார் 32 செ.மீ. நீளமும், 23,செ.மீ. அகலமும், 6 செ.மீ. தடிமனும் கொண்டுள்ளது

The post கீழடி அகழாய்வில் செங்கல் கட்டுமானம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Dinakaran ,
× RELATED மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது