×

மாற்றுத்திறனாளிகள் சான்று பெற 15ம் தேதி வரை சிறப்பு முகாம்: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகள் சமூக தரவு கணக்கெடுப்பில் 1,731 பேர் மாற்றுத்திறனாளிகள் சான்று பெறவில்லை என கண்டறியப்பட்டது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளி சான்று வழங்க சிறப்பு மருத்துவ முகாம்கள் அரசு மருத்துவமனையில் நவ.15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, வடசென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை, எழும்பூர் குழந்தை நல மருத்துவமனை மற்றும் எழும்பூர் கண் மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post மாற்றுத்திறனாளிகள் சான்று பெற 15ம் தேதி வரை சிறப்பு முகாம்: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,District Collector ,Rashmi Siddharth Jagade ,Dinakaran ,
× RELATED சென்னையில் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு...