×

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்ததா?

புதுடெல்லி: டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே பயங்கர வெடி சத்தம் கேட்டதால் அங்கு குண்டு வெடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று மாலை பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததாக போலீசாருக்கு அழைப்பு வந்தது. ஆனால் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்த போது அப்படி எந்த குண்டு வெடிப்பும் நிகழவில்லை. இருப்பினும் தேடுதல் பணி நடக்கிறது என்று தெரிவித்தனர். ஆனால் இஸ்ரேலிய தூதரக செய்தித் தொடர்பாளர் கைநிர் என்பவரை தொடர்பு கொண்டு கேட்ட போது,’ இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகாமையில் மாலை 5:48 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்.

டெல்லி காவல்துறை மற்றும் பாதுகாப்புக் குழுவினர் நிலைமையை இன்னும் ஆராய்ந்து வருகின்றனர்’ என்றனர். டெல்லி தீயணைப்பு சேவை அதிகாரிகள் கூறுகையில்,’ இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு குறித்து எங்களுக்கு மாலை 5:45 மணிக்கு அழைப்பு வந்தது. அங்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தோம். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து அந்த பகுதியில் ஆய்வு செய்து வருகிறோம்’ என்றனர்.

The post டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்ததா? appeared first on Dinakaran.

Tags : Israeli ,embassy ,Delhi ,New Delhi ,Israeli Embassy ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் பிணைக் கைதிகள் 6 பேர் காசாவில்...