×

முதல்வர் குறித்து அவதூறு பாஜ மாவட்ட தலைவருக்கு 2 நாள் போலீஸ் காவல்

சென்னை: பெரவள்ளூர் சதுக்கத்தில் கடந்த 1ம் தேதி மாலை பாஜ சார்பில், ஒன்றிய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், வடசென்னை மேற்கு மாவட்ட பாஜ தலைவர் கபிலன் பேசும்போது, தமிழக முதல்வர் குறித்து அவதூறாகவும், ஒருமையிலும் பேசினார்.

இதுகுறித்து பெரவள்ளூர் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, கடந்த 4ம் தேதி, கபிலனை கைது செய்தனர். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், கபிலனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் 5வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கபிலனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து பெரவள்ளூர் போலீசார் பாஜ மாவட்ட தலைவர் கபிலனிடம் விசாரிக்க உள்ளனர்.

The post முதல்வர் குறித்து அவதூறு பாஜ மாவட்ட தலைவருக்கு 2 நாள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.

Tags : Baja district ,Chennai ,Union Budget ,Peravallur Square ,Baja ,Bajaj ,H. ,Raja ,Vatchenai West District ,Baaja ,Dinakaran ,
× RELATED பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது