×

ஆபத்தான அமில கன்டெய்னர்களுடன் கொச்சி கடலில் கப்பல் கவிழ்ந்தது: பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு எம்எஸ்சி எல்சா 3 என்ற சரக்கு கப்பல் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு சென்றது. இந்தக் கப்பலில் இருந்த கண்டெய்னர்களில் எரிவாயு எண்ணை, மற்றும் சல்பர் எரிபொருள் எண்ணெய் உள்பட அமிலப் பொருட்கள் இருந்தன. இவை மிகவும் ஆபத்தானவை ஆகும். நேற்று இந்த சரக்கு கப்பல் கேரள கடல் எல்லையிலிருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் திடீரென கவிழத் தொடங்கியது. அப்போது அமிலப்பொருட்கள் அடங்கிய 8 கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன. இதைத்தொடர்ந்து இந்த கண்டெய்னர்கள் கரைக்கு வந்தால் பொதுமக்கள் யாரும் அதை தொடக்கூடாது என்று பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரித்துள்ளது. மேலும் கப்பலில் இருந்த 21 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

The post ஆபத்தான அமில கன்டெய்னர்களுடன் கொச்சி கடலில் கப்பல் கவிழ்ந்தது: பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kochi ,Disaster Management Board ,Thiruvananthapuram ,Vizhinjam port ,Kerala ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...