×

செக்குடியரசில் நடந்த ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் தொடரில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா சாம்பியன்..!!

செக்குடியரசு: ஆஸ்ட்ரவா கோல்டன் ஸ்பைக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தி உள்ளார். செக்குடியரசு நாட்டில் உள்ள ஆஸ்ட்ராவா நகரில் கோல்டன் ஸ்பைக் தடகள சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் ஈட்டி எரிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா உட்பட பல்வேறு நாடுகளை சார்ந்த 9 பேர் கலந்து கொண்டனர்.

6 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் அதிகபட்சமாக 85.29 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எரிந்து நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். அவரை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா மற்றும் வீரர்கள் 2 மற்றும் 3வது இடங்களை பிடித்தனர். சமீபத்தில் நடைபெற்ற பாரீஸ் டைமண்ட் லீக் தொடரிலும் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் சாம்பியன் பட்டம் வென்றார்.

The post செக்குடியரசில் நடந்த ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் தொடரில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா சாம்பியன்..!! appeared first on Dinakaran.

Tags : Neeraj Chopra ,Astrava Golden Spike series ,Secutieraz ,SEKUDIRAU ,NEERAJ CHOPRA ASATI ,GOLDEN SPIKE SPEAR ,ASTRAVA ,Golden Spike Athletic Champion ,Secuderasu ,India ,Neeraj ,Secutierz ,Dinakaran ,
× RELATED தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20...