சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி 24ம் தேதிக்கு பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 25ம் தேதி புயலாக மாறும். அதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் அதீத மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இலங்கைக்கு தெற்கே நீடித்துக் கொண்டு இருந்த காற்று சுழற்சி சற்று விலகி மன்னார் வளைகுடா பகுதிக்கு வந்து, அங்குநிலை கொண்டு இருந்த வேறு ஒரு காற்று சுழற்சியுடன் நேற்று இணைந்தது. இது சற்று தென் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளதால் மன்னார் வளைகுடா ராமேஸ்வரம் மற்றும் இலங்கை பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கோடியக்கரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தங்கச்சிமடம், தனுஷ்ேகாடி பகுதிகளில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஆனால் தென்கோடியில் நெல்லை, கன்னியாகுமரி இடையே மாஞ்சோலை பகுதிகளில் மழைக்கும் வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி முனை, தூத்துக்குடி, கோடியக்கரை பகுதிகளிலும் லேசான மழை பெய்யும். 23 மற்றும் 24ம் தேதியில் காற்று சுழற்சி மேற்கு ேநாக்கி நகர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் ஊடாக ெவப்ப குளிர் நீராவிக் காற்று வீசத் தொடங்குவதால் அதில் குளிர்ப் பதம் கூடுதலாக இருக்கும் என்பதாலும் கடல் பகுதியில் அதிகாலை நேரங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. காலை நேரத்துக்கு பிறகு செங்கல்பட்டு மாவட்டத்துக்கு தெற்கு பகுதியிலும், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தெற்கு பகுதியிலும் சேலம், ஈரோடு, கோவை வரை உள்ள மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் அனைத்து உள் மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் தென் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யும். அதேபோல, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாஞ்சோலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
மேலும், வங்கக் கடலில் ஏற்கனவே உருவாகியுள்ள காற்று சுழற்சி மேலும் வலுப்பெற்று 23ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும். 24ம் தேதியில், நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தீவிரம் அடையும்போது குமரிக் கடல் பகுதியில் நீடித்து வந்த காற்று சுழற்சி விலகிவிடும். அதனால் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக, 25 மற்றும் 26ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அப்போது, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதேநிலை 27ம் தேதி வரை நீடிக்கும். இதையடுத்து, நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பிறகு அது வலுப்பெறும் போது புயலாக மாற வாய்ப்புள்ளது. அந்த புயல் டெல்டா மாவட்டங்களுக்கு நெருங்கிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை வழியாகவோ அல்லது திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர் வழியாகவோ அல்லது கடலூர்-புதுச்சேரி இடையே கரை கடக்க வாய்ப்புள்ளது. இந்த பகுதிகள் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தாலும் சென்னையில் அதிக மழை பெய்யும். குறிப்பாக 25ம் தேதி முதல் 27ம் தேதிகளில் அதிக மழை பெய்யத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
The post வங்கக் கடலில் 25ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு: கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் appeared first on Dinakaran.