×

நடிகர் டெல்லி கணேஷின் உடல் நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம்

சென்னை: நடிகர் டெல்லி கணேஷின் உடல் நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ராமாபுரத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து டெல்லி கணேஷ் உடலுக்கு இந்திய விமானப்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற விமானப்படை வீரர்கள், டெல்லி கணேஷ் உடல் மீது தேசியக்கொடி போர்த்தியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து டெல்லி கணேஷின் உடல் சென்னை நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து நெசப்பாக்கம் மின் மயானத்துக்கு டெல்லி கணேஷ் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர் நடிகர் டெல்லி கணேஷின் உடல் நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நண்பர்கள், உறவினர்கள் கண்ணீர் மல்க அவரின் இறுதிப் பயணத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

The post நடிகர் டெல்லி கணேஷின் உடல் நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் appeared first on Dinakaran.

Tags : Delhi Ganesh ,Nespakam Min Mayan ,Chennai ,Nespakakkam Min Mayan ,Ramapuram ,Nespakakkam E-Mayan ,
× RELATED காதலனை அடித்து விரட்டிவிட்டு மாணவியை...