×

பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்யும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் யார்?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்யும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் யார்? என ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். விருதுநகர் மாவட்டம் எதிர்கோட்டையைச் சேர்ந்த சமுத்திரவள்ளி என்பவர் ஐகோர்ட் மதுரைகிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் குறிப்பிட்டுள்ள மனுவில் 2014ல் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் எனது கணவர் காளிமுத்து உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

வெடிவிபத்தில் எனது கணவர் உயிரிழந்ததால் வாழ்வாதாரத்தை காக்க ரூ.40 லட்சம் இழப்பீடும் அரசு வேலையும் தர வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி முன் இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி பட்டாசு தொழிற்சாலைகளின் மேற்பார்வையாளராக செயல்படும் அலுவலர்கள் யார்? என்றும் விபத்துக்கான காரணம், விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் குறித்து வெடி பொருள் கட்டுப்பாட்டு அலுவலர் பதில்தர உத்தரவிட்டார். மேலும் அரசு மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

The post பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்யும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் யார்?: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Tags : ICourt branch ,Madurai ,iCourt ,Maduraiklai ,Samuthravalli ,Ethikottai ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED கல்லீரல் அறுவை சிகிச்சை கட்டமைப்பு: ஐகோர்ட் கிளை கேள்வி