×

நாட்டின் முதல் சிமுலேட்டர் நவீன பயிற்சி மையம்:அரக்கோணத்தில் திறப்பு

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை வளாகத்தில், வானில் பறந்தபடி அளிக்கும் பயிற்சிகளை, அதிநவீன தொழில்நுட்ப கருவிகளுடன் தரையில் இருந்தவாறு அளிப்பதற்காக அசோக் ராய் சிமுலேட்டர் பயிற்சி மையம் நாட்டிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி மைய வளாகத்தையும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அசோக் ராய் உருவச்சிலையையும் இந்திய பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கிரிதர் அரமனே நேற்று திறந்து வைத்தார். சிறப்பு தபால் உறையையும் வெளியிட்டார். இதில்,வைஸ் அட்மிரல்கள் பிஸ்வஜித் தாஸ்குப்தா, சஞ்ஜய் ஜஸ்ஜித் சிங், அரக்கோணம் ராஜாளி கடற்படை கமோடர் கபில் மேத்தா, அசோக் ராய் குடும்பத்தினர், சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நாட்டின் முதல் சிமுலேட்டர் நவீன பயிற்சி மையம்:அரக்கோணத்தில் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Seman ,Ranipet District ,Varakonam INS Rajani Naval Campus ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...