×

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கல்

 

கும்பகோணம், நவ.9: கும்பகோணம் அருகே சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சங்க செயலாளர் சின்னபொண்ணு தலைமை வகித்து வரவேற்று பேசினார். தொடர்ந்து கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலாளர் இந்திரஜித் கலந்துகொண்டு 1,715 உறுப்பினர்களுக்கு ரூ.4 லட்சத்து 45 ஆயிரம், பங்கு ஈவு தொகை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். விழாவில் உதவி கள மேலாளர்கள் சங்கர், மகாலெட்சுமி மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.

 

The post கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Saraphojirajapuram Primary Agriculture Cooperative Credit Union ,Cooperative Credit Union ,Dinakaran ,
× RELATED கும்பகோணத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்