×

பாதுகாப்பான புலம் பெயர்வுக்கான வழிமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்: மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன் பங்கேற்பு

சென்னை: பாதுகாப்பான புலம் பெயர்வுக்கான வழிமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பான ஒரு நாள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு வீட்டுவேலை தொழிலாளர் நல அறக்கட்டளையுடன் இணைந்து, ‘பாதுகாப்பான புலம் பெயர்வுக்கான வழிமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பான ஒரு நாள் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் அரங்கத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் கே.விஜயகார்த்திகேயன் வரவேற்றார்.

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன், கனிமொழி எம்பி, கலாநிதி வீராசாமி எம்பி, தமிழ்நாடு வீட்டுதொழிலாளர் நல அறக்கட்டளையின் தலைமை செயல்பாட்டாளர் வளர்மதி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் நீதியரசர் ராஜ இளங்கோ மற்றும் வி.கண்ணதாசன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து இரண்டு குழு விவாதங்கள் நடந்தன. முதல் குழு விவாதத்தில் லயோலா கல்லூரி பெர்னார்ட் டி.சாமி முறையே தலைவர் மற்றும் நடுவராக இருந்தார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், கிளைச் செயலக தலைவர் மற்றும் புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர் வி.வெங்கடாசலம், இந்திய, வெளியுறவு பணி, சென்னை மலேசிய தூதரக தொழிலாளர் இணைப்பாளர் பாலசுப்ரமணியன், தர்மராஜா மற்றும் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னைகள் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டனர்.

இரண்டாவது குழு விவாதத்தில் ஆந்திர மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி மந்தட்டா சீதாராம மூர்த்தி, கேரள மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் பைஜுநாத் மற்றும் பொதுத் துறை சிறப்பு செயலாளர் கலையரசி ஆகியோர் பாதுகாப்பான புலம் பெயர்வை ஊக்குவிப்பதில் மாநில அரசின் பங்கு பற்றி அவரவர் மாநிலத்தின் மாதிரிகள் பற்றி விவாதித்தனர். இதில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார், தமிழ்நாடு கூட்டணி நிறுவனர் மற்றும் உறுப்பினர் பி.பாலமுருகன் ஆகியோர் முறையே தலைவர் மற்றும் நடுவராக இருந்தனர். தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், நீதிபதி பாஸ்கரன், உறுப்பினர்கள் நீதிபதி ராஜ இளங்கோ மற்றும் கண்ணதாசன் மற்றும் சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

The post பாதுகாப்பான புலம் பெயர்வுக்கான வழிமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்: மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : State Human Rights Commission ,Judge ,Bascaran ,Chennai ,Chennai. ,Tamil Nadu ,S. Paskaran ,Dinakaran ,
× RELATED தண்டனை கைதி உயிரிழப்பு: ரூ.3 லட்சம் இழப்பீடுதர ஆணை