×

தொடர் விடுமுறை எதிரொலி: ஆம்னி பேருந்து கட்டணம் இரு மடங்கு உயர்வு..!!

சென்னை: தொடர் விடுமுறை எதிரொலியாக, ஆம்னி பேருந்து கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15 அன்று கொண்டாட உள்ளது. இதன் காரணமாக அனைத்து பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் வசிக்கக்கூடிய பெரும்பாலான பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். நாளை சுதந்தர தினவிழா விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை என தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் சென்னையில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு அதிகப்படியாக செல்வர்.

இதன் காரணமாக, அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான மக்கள் ஆம்னி பேருந்துகளில் சொகுசாக செல்வதற்கு திட்டமிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்வர். இந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக ஆம்னி பேருந்துகள் கட்டணம் தற்போது உயர்ந்துள்ளது. சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. அதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. சுமார் ரூ.3000 வரை இந்த கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் கடுமையான துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

The post தொடர் விடுமுறை எதிரொலி: ஆம்னி பேருந்து கட்டணம் இரு மடங்கு உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Omni ,India ,78th Independence Day ,
× RELATED தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி கட்டணம்...