×

காங்கிரசை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு செயல்படுகிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: காங்கிரசை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு செயல்படுகிறது என செல்வப்பெருந்தகை குற்றம் சாடியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் தமிழகம் 9, புதுச்சேரி என 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, மயிலாடுதுறை தொகுதிகளுக்கு இன்று மாலை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்ளை சந்தித்து பேசினார். அப்போது; இன்று மாலைக்குள் நெல்லை, மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளரும் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார். ஒன்றிய பா.ஜ.க. அரசால் காங்கிரஸ் நிதி ரூ.265 கோடி திருடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 11 வங்கிக்கணக்குகளை முடக்கியுள்ளன. காங்கிரசை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு செயல்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் நிதி ஆதாரத்தை முடிக்கினால் காங்கிரஸ் முடங்கிவிடும் என பிரதமர் நரேந்திர மோடி பகல் கனவு காண்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு பணம் ஒரு பொருட்டு இல்லை, மக்களை நம்பிதான் நாங்கள் நிற்கிறோம். இவ்வாறு கூறினார்.

 

The post காங்கிரசை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு செயல்படுகிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : EU government ,Congress ,Chennai ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு...