கொடுமுடி : கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ரூ. 89,22,536 க்கு ஏலம் போனது. கொடுமுடி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 225க்கும் மேற்பட்ட விவசாயிகள் எள், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில், தேங்காய் காய்கள் 7,627 வரத்தாகின. எடை 27.75 1/2 குவி., மதிப்பு ரூ.62,470. இது கிலோ ஒன்றுக்கு குறைந்த விலையாக ரூ.19.25 க்கும், அதிக விலையாக ரூ. 26.15 க்கும், சராசரி விலையாக ரூ.24.65க்கும் ஏலம் போனது.
கொப்பரை தேங்காய் மூட்டைகள் 461 வரத்தாகின. எடை 224.53 1/2 குவி., மதிப்பு ரூ.16,36,428. இதில், கிலோ ஒன்றுக்கு முதல்தரம் குறைந்த விலையாக ரூ.80.19 க்கும், அதிக விலையாக ரூ.83.29 க்கும், சராசரி விலையாக ரூ.82.59 க்கும் ஏலம் போனது. இரண்டாம்தரம் குறைந்த விலையாக ரூ.60.65 க்கும், அதிக விலையாக ரூ.81.59க்கும், சராசரி விலையாக ரூ.78.30 க்கும் ஏலம் போனது.
எள் மூட்டைகள் 659 வரத்தாகின. எடை 493.05 குவி., மதிப்பு ரூ. 72,23,638. இதில், கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு குறைந்த விலையாக ரூ. 139.99 க்கும், அதிக விலையாக ரூ. 154.99 க்கும், சராசரி விலையாக ரூ. 152.99 க்கும் ஏலம் போனது. சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு குறைந்த விலையாக ரூ. 137.99 க்கும், அதிக விலையாக ரூ. 155.09 க்கும், சராசரி விலையாக ரூ.153.99 க்கும் ஏலம் போனது. வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு குறைந்த விலையாக ரூ.154.99 க்கும், அதிக விலையாக ரூ.164.99 க்கும், சராசரி விலையாக ரூ. 160.99 க்கும் ஏலம் போனது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜமுனா முன்னிலையில் மொத்தம் 89,22,536 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
The post கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய், கொப்பரை, எள் ரூ. 89.22 லட்சத்துக்கு ஏலம் appeared first on Dinakaran.