×

சமூகநீதி எனும் பேரொளியை தூக்கி சுமந்த விடிவெள்ளி: வி.பி.சிங்குக்கு முதல்வர் புகழாரம்

சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங்கின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம்! ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றைத் திரிபுகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்!

 

The post சமூகநீதி எனும் பேரொளியை தூக்கி சுமந்த விடிவெள்ளி: வி.பி.சிங்குக்கு முதல்வர் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : V.P. Singh ,Chief Minister ,Chennai ,Tamil Nadu ,M.K. Stalin ,Indian Prime Minister ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...