×

துறை ரீதியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை: 4 அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: துறை ரீதியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இதில் 4 அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் துறை சார்ந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. நெடுஞ்சாலை, பத்திர பதிவுத்துறை, உணவு, கூட்டுறவு ஆகிய துறைகளின் ஆய்வு கூட்டம் நடக்கிறது.

இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, பெரியகருப்பன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது. அதே போல முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போது அறிவுறுத்தல்களை வழங்குவார் என்று கூறப்படுகிறது.

 

The post துறை ரீதியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை: 4 அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,Chennai Secretariat ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு...