×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 20ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நவ.20ம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:
தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற நவ.20ம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும். அப்போது உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டத்தில் கழக ஆக்க பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 20ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : M.U. ,Dimuka High Level Task Force ,Stalin ,Duraimurugan ,Chennai ,Mudhalvar ,Mu. K. ,Secretary General ,High Level Action Plan Committee ,Dimuka ,Dizuka ,K. ,Dinakaran ,
× RELATED போதையில்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில்...